நிலையவள்

தூக்கு தண்டனை கட்டாயம் ​வேண்டும்- பாலித

Posted by - July 13, 2018
மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கு காரணம் அண்மையில் அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமே என்று நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…
மேலும்

கைதியின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தில் கைது

Posted by - July 13, 2018
வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை செய்ய முற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
மேலும்

தாய்லாந்து பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

Posted by - July 13, 2018
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷா எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து சுமூகமான கலந்துரையாடல்…
மேலும்

கடவுச்சீட்டு விநியோகத்தில் தடைகள் இல்லை- சமிந்த ஹெட்டியாராச்சி

Posted by - July 13, 2018
கடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக சில ஊடக நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என உள்நாட்டு வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுகள் சாதாரண நடைமுறையில் விநியோகிக்கப்படுவதாகவும், ஒருநாள், மற்றும் ஏனைய…
மேலும்

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான 4 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

Posted by - July 13, 2018
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால…
மேலும்

யானை முத்துக்கள் 13 உடன் மூவர் கைது

Posted by - July 13, 2018
யானை முத்துக்கள் 13 பதிக்கப்பட்ட கைச்சங்கிலி ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் பேருவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறிப்பிட்ட கைச்சங்கிலியை பொலிஸ் உத்தியேதகத்தர் ஒருவர் வாங்குவது போல் சென்று குறித்த…
மேலும்

கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்

Posted by - July 13, 2018
யாழ். கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் யாழ் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து நேற்று…
மேலும்

முன்னறிவித்தலின்றி உடைக்கப்பட்ட வீடுகள் – 20 குடும்பங்களுக்கும் மேல் பாதிப்பு

Posted by - July 13, 2018
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தெஹிவளை அத்தப்பத்து டெரஸ் வீதியில் அமைந்திருந்த குடியிருப்புத் தொகுதி மக்களை திடீரென வெளியேறுமாறு பொலிஸார் பணித்து அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டத்தையடுத்து தாம் வீதிக்கு வந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தாம் குறித்த…
மேலும்

கடனை திருப்பி செலுத்துவதற்காக மக்களிடம் அதிக வரி-மொஹமட் முஸம்மில்

Posted by - July 13, 2018
ஒரே ஆட்சிக் காலத்திற்குள் அதிக கடன் பெற்று இருப்பது தற்போதைய அரசாங்கமே என்று தேசிய விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் கூறியுள்ளார். அந்தக் கடனை செலுத்துவதற்காக பொதுமக்களிடம் அதிக வரி அறவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

இரு தினங்களுக்கு மின் வெட்டு

Posted by - July 13, 2018
அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் நாளையும் (14) நாளை மறுதினமும் (15) மின் வெட்டு அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காலை…
மேலும்