நிலையவள்

ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு

Posted by - September 9, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை…
மேலும்

ஆர்ப்பாட்டங்களின் மூலம் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது-சாமர சம்பத்

Posted by - September 9, 2018
ஆர்ப்பாட்டங்களின் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். பதுள்ளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எந்த கடமையையும் செய்யமால் இருக்கும் குழுவினர் கொழும்பிற்கு…
மேலும்

தோல்வியடைந்தவர்கள்  கண்டி நோக்கி நகர்வது வேடிக்கையாகும் -முஜிபுர்  ரஹ்மான்

Posted by - September 9, 2018
போராட்டங்களை முறையாக மேற்கொள்ள தெரியாமல்   அரசாங்கத்தை வீழ்த்த  தலைநகரை முற்றுகையிடுவதாக குறிப்பிட்டு,  தோல்வியடைந்தவர்கள்  கண்டி நோக்கி நகர்வது வேடிக்கையாகும் என ஐக்கிய தேசியக்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்  ரஹ்மான் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், பொது…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முயலவில்லை-சுனில்

Posted by - September 9, 2018
அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக மார்த்தட்டிக்கொள்ளும் நல்லாட்சி அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ அவற்றை தீர்க்கவோ முயற்சிக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துனெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வெளிநாடுகளுக்கு…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியாது-சந்திம

Posted by - September 9, 2018
2030 ஆண்டு வரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்…
மேலும்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - September 9, 2018
வவுனியா பாரதிபுரம் 50 வீட்டுத்திட்டத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் 21 வயதுடைய இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 21 வயதுடைய கௌரி சங்கர் என்ற இளைஞன் நேற்று மாலை அவரது உறவினர் வீட்டிற்கு பின்புறமாக காணப்படும் பாவனையற்ற…
மேலும்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - September 9, 2018
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஞானசார தேரரை விடுவிக்குமாறு தெரிவித்து இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய செயலணி நாளை (10) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் பொரல்லை…
மேலும்

விபத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு

Posted by - September 9, 2018
கார் விபத்தில் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 01 ஆம் திகதி கார் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் ஆராச்சிக்கட்டு, அடிப்பல வீதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போபத்தகம…
மேலும்

வறட்சி காரணமாக 300 நீர் பவுசர்கள் சேவையில்

Posted by - September 9, 2018
நாட்டில் நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 300 நீர் பவுசர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலையினால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுமார்…
மேலும்

வவுனியா மோட்டார் சைக்கில் விபத்து

Posted by - September 9, 2018
வவுனியா கூமாங்குளம் சதோச சந்தியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது வவுனியா நகரிலிருந்து கூமாங்குளம் நோக்கி…
மேலும்