நிலையவள்

ராகல – சென்ட் லெனாட் வன பகுதியில் உள்ள குகைக்குள் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

Posted by - September 16, 2018
ராகல – சென்ட் லெனாட் வன பகுதியில் உள்ள குகை ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 29 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரும் காட்டிற்குள் வேட்டையாட சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

கைக்குண்டுகளுடன் இருவர் கைது

Posted by - September 16, 2018
புறக்கோட்டை மற்றும் மாவத்தகம பகுதிகளில் கைக்குண்டுகள் நான்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புஸ்ஸெல்ல பகுதியில் வைத்து இரண்டு கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புஸ்ஸெல்ல பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே…
மேலும்

ஐக்கிய மக்கள் முன்னணியினை பதிவு செய்ய நடவடிக்கை-மனோ

Posted by - September 16, 2018
ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐக்கிய மக்கள் முன்னணியினை பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன்போது கட்சியின் பெயரையும் மாற்றம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவிஸ்ஸாவெல்ல, வகவத்த…
மேலும்

இந்தியா செல்ல சிவாஜிலிங்கத்துக்கு வீசா மறுப்பு

Posted by - September 16, 2018
இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வீசா வழங்க இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி ஒன்றை இந்தியாவின் மும்பையில் ஏற்பாடு…
மேலும்

நாயுடன் வந்த குவைட் நாட்டு தம்பதிக்கு தண்டனை தீர்ப்பு

Posted by - September 16, 2018
குவைட் நாட்டிலிருந்து அனுமதிப் பத்திரம் இன்றி நாய்க் குட்டியொன்றை எடுத்துவந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் போட்ட தம்பதியினருக்கு எதிராக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அந்த தம்பதியினருக்கு எதிராக பல பிரிவுகளில் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது. மிருக வளர்ப்பு, சுகாதார திணைக்களம், இலங்கை சுங்கம்…
மேலும்

இந்த அரசாங்கம் சமய சூழலை அழித்துள்ளது – மஹிந்த

Posted by - September 16, 2018
வானொலி, தொலைக்காட்சி என்பவற்றின் பக்கம் கவனித்தால்,  காலையில் குரோதங்களுடன் ஆரம்பித்து மாலையில் குரோதங்களுடனே முடிவடைவதாகவும், அதேபோன்று அரசாங்கம் சமய சூழலையும் அழித்துள்ளதாகவும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவன்வெலிசாய பௌத்த வழிபாட்டு வளாகத்தில் நேற்று (15) இடம்பெற்ற பௌத்த மகா…
மேலும்

யானை தாக்கியதில் இளைஞன் பலி

Posted by - September 15, 2018
மட்டக்களப்பு செங்கலடிபிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோப்பாவெளி கிராமத்தை சேர்ந்த 25வயதுடைய  இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார். இன்று காலை பால் கரக்க சென்ற போதே யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியாகி உள்ளார். குறித்த சடலம் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி

Posted by - September 15, 2018
புத்தளம் – ஆணமடுவ மிதிவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் மரணமடைந்துள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் நள்ளிரவில், புத்தளம் – ஆணமடுவ பாதையில் கஜுவத்த பிரதேசத்தில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மிதிவண்டியில் பயணம் செய்தவர்…
மேலும்

கொழும்பின் பல பகுதிகளில் பல கொலைகளைச் செய்த சந்தேக நபர் கைது

Posted by - September 15, 2018
கொழும்பின் பல பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் நடாத்தி பல கொலைகளைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 24 வயதான இளைஞராவார். குறித்த சந்தேக நபர் கொழும்பு ஜம்பட்டா வீதி மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் செய்து…
மேலும்

மதுபானங்களுடன் ஒருவர் கைது

Posted by - September 15, 2018
சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு மதுபான வகைகளை உடமையில் வைத்திருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம்…
மேலும்