நிலையவள்

கனகாம்பிகை குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - October 1, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (09) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி பொலிசார் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5…
மேலும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழை

Posted by - October 1, 2018
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு (ஒக்டோபர் 1 முதல் 3 வரை)…
மேலும்

ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை பொலிஸார் கைது

Posted by - October 1, 2018
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை கோப்பாய் பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர். கோப்பாய் பகுதியில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள ஆவா குழுவினர் வந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு நின்ற இருந்த இளைஞர்கள் தப்பி…
மேலும்

துணிச்சலுடன் முன்னோக்கிப் பயணிக்க சிறுவர்களுக்குப் பக்கபலமாக இருங்கள்!- ரணில்

Posted by - October 1, 2018
உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள உலக…
மேலும்

சுதந்திர கட்சி தனி அரசாங்கம் அமைக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

Posted by - October 1, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்ய வேண்டுமாயின் சு.க. தனித்து புதிய அரசாங்கமொன்றை அமைப்பதே சிறந்தது என நெடுஞ்சாலைகள் மற்றும்…
மேலும்

விக்ரமரத்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - September 30, 2018
பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் வாகனம் ஒன்று ஜீப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மற்றும் பிள்ளைகள்…
மேலும்

தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - September 30, 2018
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

குடிநீர் போத்தலுக்கான நிர்ணய விலைகள்

Posted by - September 30, 2018
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் குறைந்தபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து அதி விஷேட வர்த்தமானி ஒன்றை நுகர்வோர் அதிகார வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 350 மில்லிலீற்றர் முதல் 499 மில்லி லீற்றர் கொள்ளளவுகொண்ட குடிநீர் போத்தல் ஒன்றின் விலை 26 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…
மேலும்

புகையிரத கட்டண அதிகரிப்பு நாளை முதல் அமுல்

Posted by - September 30, 2018
புதிய கட்டணங்கள் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, புகையிரத கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக் கட்டண திருத்தம் 10 வருடங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த பட்ச…
மேலும்

கல்முனை கரையோர கடற் பிராந்தியங்களில் அதிகளவான கீரி மீன்கள்

Posted by - September 30, 2018
மிக நீண்ட நாட்களின் பின்னர் இன்று (30) கல்முனை கரையோர பிரதேசங்களில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருதமுனை தொடர்க்கம் நிந்தவூர் வரையான கடற் கரைவலை தோணிகளுக்குக் கீரி மீன்கள் அதிகளவாக பிடிபட்டன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மீன்கள்…
மேலும்