அமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை 51 சதவீதம் பேரும், டொனால்ட் டிரம்ப்பை 39 சதவீதம் பேரும் ஆதரிக்கக் கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்த வீட்டில் உள்ள படுக்கையறையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரச இசை விருது வழங்கல் – 2016ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது மட்டக்களப்பைச் சேர்ந்த சஞ்சித் லக்ஷ்மனின் காற்றே என் வாசல் என்ற பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சியில் மோட்டார் சைக்கிளொன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயம் அடைந்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் பன்னங்கண்டியில் இருந்து வட்டக்கச்சி நோக்கி நான்கு பேருடன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வட்டக்கச்சி சுவிற்செண்டர் முகமட் முன்பள்ளிக்கு அருகாமையிலுள்ள…
அம்பாறை – கொண்டுவடவான ஆற்றுக்கு அருகில் பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர் விஷம் அருந்தி தானும் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதாக, அம்பாறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிபில – பதுளை வீதியின் உணகொல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் 25க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன.
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று அதிகாலை முதல் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளன. மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் பஸ் சாரதி ஒருவர், கடந்த 25ம் திகதி சிலாபம் – காக்கபள்ளிய பகுதியில்…
1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக தடைப்பட்ட போக்குவரத்துச் சேவை நேற்று முதல் யாழில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும் தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கப்பபட்டுள்ளது.