செங்கம் அருகே டிஜிட்டல் பேனரால் சிக்கிய எய்ட்ஸ் மாப்பிள்ளையின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மணப்பெண் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உறவினரை மணந்தார்.
சேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரெயில்வே மேலாளர் உள்பட 34 பேரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.சேலம் , ராசிபுரம், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் சென்னை…
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 68 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் அணையின் நீர் மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
பழனி அரசு அருங்காட்சியகத்தில் கி.மு. 600 முதல் இன்றைய நாணயங்கள் வரை என்ற தலைப்பில் நாணய கண்காட்சி நடந்தது. இதில் இந்தியாவின் தொன்மையை பிரதிபலிக்கும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட கி.மு.600 காலகட்டத்தில் உள்ள நாணயங்கள் காட்சிபடுத்தப்பட்டன. அவற்றை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன்…
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் நேரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு -பம்பலப்பிட்டி -கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நீண்ட காலத்திற்குப் பின்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதலாவது பேருந்து சேவை இன்று இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.