சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இன்று (வெள்ளிக்கிழமை) காலை வருகைதரும் மைத்திரிபால சிறிசேன சுப்ரமணியம் பூங்காவில் நடைபெறவிருக்கும் போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சாதாரண வெளிநாட்டு கடவுசீட்டுகளே வழங்கப்பட்டுள்ளன என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உடுவில் மகளிர் கல்லூரியில் அதிபர் நியமனம் தொடர்பாக, கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று முடிவுக்கு வந்துள்ளது. ‘நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படைக்கிறேன்’ என முன்னாள்…
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று(8) கைவிட்டுள்ளனர்.
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டையை, வாக்காளர்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை, தேர்தல்கள் செயலகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனடிப்படையில், http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்துக்குச் சென்று, அதிலிருக்கின்ற 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை கிளிக் செய்யவும்.…
வடக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் வழங்கியிருந்தால் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றிருக்காது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மரணித்த அனைவருக்கும் கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும் என நவசமசமாஜ கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.