நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிறிஸ்தவ சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய நத்தார் விழாவில் நேற்று(22) பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையானது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜயகோன் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவி வரும் அரிசிக்கான தட்டுப்பாடு குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அலெப்போ நகரில் நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது தங்களிடம் பிடிபட்ட துருக்கி நாட்டு வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொல்லும் கொடூர வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜப்பானில் குழந்தை பிறப்பு 10 லட்சம் ஆக குறைந்துள்ளது. 20 மற்றும் 30 வயதுக்கு குறைவான பெண்கள் எண்ணிக்கையே இதற்கு காரணம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அதன் பிறகு கிரிஜா வைத்தியநாதன் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.