ருமேனியாவின் முதல் பெண் பிரதமராக செவில் ஷஹைத் ஆக வேண்டும் என்ற பரிந்துரையை அதிபர் கிளவுஷ் நிராகரித்ததால் அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைக்கப்பட்டார். லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, டி.எஸ்.பி. மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அதிகாரிகளின் ஆலோசனையை பெற வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் கடந்த 21-ந்தேதி வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாங்கள் மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றார்.