இலங்கையில் தற்போதுள்ள மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை 2017ஆம் ஆண்டிற்குள் கவிழ்ப்பதே தனது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் காரணமாக கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்ய இருந்த நிலையில், அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
ஜப்பானின் போர் நினைவிடமான புனித தலத்தில் அந்நாட்டின் ராணுவ மந்திரி டோமி இனடா போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.