எதிர்வரும் 17 ஆம் திகதி அனைத்து உறுப்பினர்களினதும் கையொப்பத்துடனான அறிக்கையொன்றை கையளிப்பதற்கு அசோக்க பீரிஸ் தமக்கு உறுதியளித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும், தீர்மானங்களை எட்டமுன்னர் அவற்றை பொதுமக்களின் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் பன்னிரெண்டு நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 1200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் செய் நன்றி மறவா பண்பு தைத்திருநாளை கொண்டாடுவதன் எடுத்துக்காட்டப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டும்
அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அனைத்து சமூகங்களும் சமவுரிமையுடன் வாழ்வதற்கான ஒரு வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதன் அண்டிய 15,000 ஏக்கர் நிலப்பரப்பை சீன முதலிட்டாளர்களுக்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.