சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த கலவரத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்த 142 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வழங்கினார்.
இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 600 மில்லியன் ரூபா வழங்கியதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இணைந்து போட்டியிட மாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.