திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (03) ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.
சைட்டம் நிறுவனம் தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் மருத்துவர்கள் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினார்கள் என தெரிவித்து குரல் எழுப்புவதற்கும் அது குறித்து செயற்படுத்துவதற்கும் கெமுனு விஜேரட்னவுக்கு அதிகாரம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கறுப்பு கொடிகளுடனும், கறுப்பு பதாதைகளுடனும் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது வடமாகாண சபையின உறுப்பினர்களாகிய…
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அறிவித்துள்ளார்.
வளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக உண்மையானவர்களாக செயற்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.