தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமை பற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஜே.வி.பி. யின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இன்று காலை ஹட்டன் நகரில் மக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினார்கள்.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞ்சான சம்பவத்தில் நோயுற்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்துஅரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதாக எதிர்க்கட்சி கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், 2020ஆம் ஆண்டு வரை அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் முடிவடையும் நாளான 10-ம் தேதி மாலை முதல் 12-ம் தேதி வரை கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.