ஐக்கிய தேசியக் கட்சியின் கடான ஆசன அமைப்பாளர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்ணான்டோ, தான் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான 98 வீடுகளை வழங்க, நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், மஹிந்த ஆதரவு பொது எதிரணியுடனும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாளை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய சமரச திட்டம் தயாரிக்கப்படுகிறது.
பிரிட்டனில் முன்கூட்டியே, அதாவது ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வெற்றி பெற்றுள்ளார்.