தென்னவள்

தென் கொரியாவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்

Posted by - May 9, 2017
தென் கொரியாவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலின் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
மேலும்

‘நீட்’ தேர்வில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னதால் சர்ச்சை

Posted by - May 9, 2017
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர் அகற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும்

நெல்லையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்ட 1000 கோடி பழைய ரூபாய்

Posted by - May 9, 2017
நெல்லையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் 1000 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. பாதுகாப்புக்காக 13 போலீசார் அந்த பெட்டியில் சென்றனர்.
மேலும்

டொனால்டு டிரம்ப் – இம்மானுவேல் மக்ரான் மே 25-ந்தேதி சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு

Posted by - May 9, 2017
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இம்மானுவேல் மக்ரான் – டொனால்டு டிரம்ப் இடையே மே 25-ந்தேதி சந்திப்பு நிகழும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும்

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது

Posted by - May 9, 2017
கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு, மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
மேலும்

நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது

Posted by - May 9, 2017
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடைபெற உள்ளதால் கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது என்று தமிழ்வழியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவி கோமதி தெரிவித்தார்.
மேலும்

தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது

Posted by - May 9, 2017
டி.டி.வி.தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது என்று மேலூரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
மேலும்

எகிப்து: லிபியாவில் இருந்து பயங்கர ஆயுதங்களை கடத்திவந்த 15 லாரிகள் மீது வான்வழி தாக்குதல்

Posted by - May 9, 2017
எகிப்து நாட்டில் உள்நாட்டு சண்டையில் ஈடுபட்டுவரும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினருக்காக லிபியாவில் இருந்து பயங்கர ஆயுதங்களை கடத்திவந்த 15 லாரிகள் மீது எகிப்து போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
மேலும்

குடிபோதையில் விமானம் ஏறவந்த துணை முதல்-மந்திரியின் மகனை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Posted by - May 9, 2017
ஆமதாபாத் விமான நிலையத்தில் குடிபோதையில் விமானம் ஏறவந்த குஜராத் துணை முதல்-மந்திரி மகனான ஜெய்மின் படேலை அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள்.
மேலும்