மத்திய மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியுள்ளது. இதன்பிரகாரம் மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் சுயாதீனமாக செயற்பட போவதாக அறவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அக் கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை – சுவிட்சர்லாந்து இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ள காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பதவி வகிக்க
இலங்கை வைத்திய சபை கட்டடத்தில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட சம்பவம் தொடர்பில், தற்போது வரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை மோசடி செய்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வட மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 17 பேர் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மகஜர் அளிக்க முற்பட்டுள்ளனர்.
வட மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இணக்கப்பாட்டுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.