காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை கோரி 100ஆவது நாளாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஏ9 வீதியில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை – மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று இன்று (30) பகல் 1.40 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.