பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தமல் ஒத்திவைக்க முடியாது என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் மு.க.ஸ்டாலின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் போரூர் பாலத்தை பொது மக்கள் திறந்து பயன்படுத்தினர், தகவல் அறிந்து வந்த போலீசார் தடுப்புகளை அமைத்து பாலத்தை மூடினார்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துவரப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடற்படை வீரர்களின் அணிவகுப்பின் போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 கடற்படை வீரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.