மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் கொள்ளை மற்றும் நிலைப்பாடுகளுக்கெதிராகச் செயற்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.