மாகாண சபை ஒன்றில் உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்ததன் பின்னர் புதிய தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருப்பதாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக கபில முதன்த வைத்யரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க லெப்டினல் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு, 22 வது இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை இன்று அமைச்சரது வவுனியா இணைப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உதவி தனக்கும், தமிழ் மக்களுக்கும் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.