திருகோணமலை நகரில் இன்று ஜே.வி.பியின் சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இனவாத மற்றும் மதவாததிற்கு எதிராக நடை பவணியும் கண்டன ஆர்பாட்டமும் இடம்பெற்றது.
தமது கோரிக்கைகளுக்கு நாளை உரிய தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடில், நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்து மாணவர்களின் செயற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை கைது செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் என்றோ ஒருநாள் மாவட்டத்திற்குள் கம்பீரமாக நுழையும் பொழுது பிரச்சனைக்குரிய சமூகமாக மாறப்போவது தமிழ் முஸ்லிம் உறவுகள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்” என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று அம்மாநில பெண் போலீஸ் தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார்.