மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று மூன்றாவது நாளாகவும் ஆஜராகியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை நிர்மாணித்தது சம்பந்தமாக, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டேசி போரஸ்ட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு, கொம்பனிவீதி பிரதேசத்தின் யூனியன் பிளேஸிலுள்ள அரச கூட்டுத்தாபனம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று(21) வெளியானது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிர மசிங்க அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
ஐ.நா. சபை கொண்டு வந்துள்ள அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து போட்டு இருக்கும் நிலையில், இந்த ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் 10-வது உச்சி மாநாடு அடுத்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெறும் என உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட் (94) வயோதிகம் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்றே அழைக்கலாம் என ஐ.நா.சபையில் இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது.