ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய வைகோவை சிங்களர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றதற்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தில் அரச துறை அதிகாரிகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் மறைமுக ஒத்துழைப்புடனேயே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் செயலகம் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மாறிவரும் சுற்றுலாத்துறை அபிவிருத்தியினை தூரநோக்கு சிந்தனை வட மாகாணத்தில் ஏற்படுத்துவோம் என்னும் கருப்பொருளிலான சுற்றுலாத்துறை தினநிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.