காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.