தமிழகத்தில் லோக் ஆயுக்தா கோர்ட்டுகளை விரைவில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 5-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை மலர் இயக்குனர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் வரும் சனிக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக கவர்னர் அமைத்த விசாரணைக்குழுவின் தலைவர் சந்தானம் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், அதன் மாநில கிரிக்கெட் சங்கங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்புக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக அமெரிக்க உளவுப்படை தலைவர் மைக் போம்பியோ வட கொரியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்.