யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவியை நாடி காவல் துறை வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகரில் பேரணி இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை இணைந்து…
நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி பொலிஸார் ஊடாக கூறியிருக்கின்றது.
யாழ்ப்பாணம் நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த சந்தேக நபரை விளக்கமறியில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
புகையிரத தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதனால் அவர்களது சுயநல கோரிக்கைகளுக்கு அரசாங்கம் வளைந்து கொடுக்காது என தெரிவித்த போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க, தீர்வு காணும் வரை பொது மக்கள் மாற்று வழிமுறைகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கை வந்த மாலைதீவு பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.