இராணுவம் மக்களுக்கு செய்யும் சேவைகள் அரசியல் நோக்கம் கொண்டதோ, அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில் காணப்பட்ட ‘தராசு’ அளவீடுகள் பிழையாக காணப்பட்ட நிலையில் குறித்த நிலையத்திற்கு எதிராக மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர், குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர் என தெரியவந்துள்ளது.
மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 30-ந்தேதி நிறைவு பெறுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் மு.முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
”முதல்வரும், துணை முதல்வரும் ஆட்சியை நடத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். கட்சியை நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை. இவர்கள் இருவரும் கட்சியை அழிக்கிறார்கள்” என தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகநாதன் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.