நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, இதுவரையில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதென, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா டெப்ளிட்ஸிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர்.
ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 12 கோடி ரூபா கொடுக்கப்படவுள்ளதாக மஹிந்த பக்கம் பாய்ந்துள்ள வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஐ.தே.க சார்பு வர்த்தகர்கள் சிலர் இதற்கு முன்வந்துள்ளதாக வியாழேந்திரன் அதிர்ச்சித் தகவல்களை தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளாராம்.
சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 179 குடும்பங்கள் 656 பேர் இடம்பெயர்ந்து 3 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.