எமது கட்சியை சேர்ந்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தற்போது காணப்படும் பொருளாதார நிலையில் 12.5 கிலோகிராம் லிட்றோ எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 600 ரூபாவால் குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தேவாலயங்களுக்குள் இன்று (06.10) காலை மோப்பநாய் சகிதம் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இலங்கையில் உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் இரு மாதங்களின் பின் வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் மீண்டும்…
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இனி கிடையாது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மறே தோட்ட கெடல்ப் பிரிவில் 3.30 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான பெண் ஒருவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவடைய உள்ளது.