திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 46 கைதிகளில் 20 கைதிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேரின் வழக்கு விசாரணையை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளைத் தடுத்தல்’ சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து நவம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு விசேடமாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை Fits Air இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது. இரத்மலானையில் இருந்துபுறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது FitsAir விமானம்.…
இலங்கை இராணுவத்தினர் இந்தியாவுக்கு சென்று ரயில்வே துறையில் பயிற்சி பெறுவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாகவும் அதனடிப்படையில் முதல் கட்டமாக 30 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
இழுத்தடிப்பு நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றன. தனித்தனி அறிவிப்புக்களாகவே இவைகள் வெளிவந்துள்ளன. ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டு, மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என்று கூறியிருந்தது.