நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நிதி சேகரிப்பு தொடர்பில் ஆராயும் விதமாகச் சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 1100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விடுமுறைக்கு பின்னர் அரச பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்துகொள்ளவேண்டும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ ஆகியோரே இவ்வாறு…
இந்த நாட்டுக்கு சாபக்கேடாக அமைந்துள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் வலியுறுத்தினார்.
தமிழர்களுக்கேயான தனித்துவமான மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் மரணித்த நபர்களை நல்லடக்கம் செய்து வந்த ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே ஆட்சியைக் கவிழ்ப்போம்.
முக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது; இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும், அஞ்சுவதும் அதிகரித்து, நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர்…