கேகாலை – ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இதன் போது ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவரடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (20) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டம் கோத்தா கோ ஹோம் பதுளைக்கிளை ஊடாக முன்னெடுக்கப்பட்டது
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் கோரியே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான தௌபீக், இர்ஷாத் ரஹ்மான், பைசல் காசிம் ஆகிய மூவரும் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை, வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 322 ஊழியர்கள் இன்று(20) காலை உணவு ஒவ்வாமை காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும். ராஜபக்ஷர்களின் குடும்பமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற நினைப்பை கைவிடவும், இது ராஜபக்ஷர்களின் நாடு அல்ல, இப்போது போது, தயவு செய்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் என்று, ஆளும் கட்சியில் இருந்து விலகி, சுயாதீனமாக…
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் சிலர், மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவே, ஆசிரியர்கள் சிலர் மாட்டுவண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.
எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று பகல் நேர போசனத்துக்காக நேரம் ஒதுக்குவது தொடர்பில் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.