சீமெந்து மூடை ஒன்றின் விலையை 400 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவுக்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
பருத்தித்துறையில் உள்ள சதொசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டு அடைந்துள்ள அராஜக நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றால், தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச ராஜகருண தெரிவித்துள்ளார்.
“ராஜபக்ச அரசு ஆடிய ஆட்டங்கள் அடங்கப் போகின்றன. இந்த அரசைக் கவிழ்க்கும் எமது பிரேரணை வெல்லப்போகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி பதவிவிலகவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக நாளை முதல் ஐக்கிய மக்கள் சக்தி வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களிடமிருந்து சுரண்டுவதில் முன்னணி மருத்துவர்களும் மும்முரமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளது தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை.