மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து வெள்ளிக்கிழமை(26) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தானர்.
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளம் தம்பதியர் இன்று வெள்ளிக்கிழமை (26) கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஹரேந்திர கலுகம்பிட்டிய தெரிவித்தார்.
நல்லூரில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின்போது “நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த பொதுமகனுடன் சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முரண்பட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நிகழ்விடத்தில்…
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வருடாந்தம் இரண்டு சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க கௌரவமான, அமெரிக்க கடற்படை முதுமாணிக் கல்லூரியின் சிறந்த சர்வதேச மாணவர் விருதினைப் பெற்றுக்கொண்ட இலங்கை கடற்படையினைச் சேர்ந்த LCDR கத்ரிஆரச்சிகே கத்ரிஆரச்சிக்கு எமது வாழ்த்துக்களை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று(26.09.2025) அவர் பிறந்து வாழ்ந்த ஊரெழுவில் இருந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஊர்தி பவனிகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.
கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, தொடரப்பட்ட தேர்தல் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நவம்பர் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.