விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது!

33 0

குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

சந்தேக நபரான வர்த்தகர் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து நேற்று மாலை 06.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர் கொண்டு வந்த  பயணப்பொதிகளில் இருந்து 418 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 41 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.