தென்னவள்

சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!

Posted by - November 27, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க  1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும்

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

Posted by - November 27, 2025
அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த…
மேலும்

யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!

Posted by - November 27, 2025
யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனொருவன் மூன்று நாட்கள் தொடர் காய்ச்சலின் காரணாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும்

LOLC ஃபைனான்ஸ், வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ.14 பில்லியனை பெற்றுள்ளது

Posted by - November 27, 2025
இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFI) 2025 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியது, இது முக்கிய வணிக வழிகளில் நிலையான வளர்ச்சியையும் போட்டித்தன்மை வாய்ந்த…
மேலும்

170 மண்சரிவு சம்பவங்கள் பதிவு : 26 பேர் உயிரிழப்பு !

Posted by - November 27, 2025
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.
மேலும்

போர்ச்சூழலில் உயிர்நீத்தவர்களுக்கு வெருகல் பிரதேச சபை வளாகத்தில் நினைவஞ்சலி

Posted by - November 27, 2025
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச சபை வளாகத்தில்  புதன்கிழமை (26) நடைபெற்றது. வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் உதவித்…
மேலும்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

Posted by - November 27, 2025
மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொள்ளுப்பிட்டியில் பஸ் – கார் மோதி விபத்து!

Posted by - November 27, 2025
கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 27, 2025
முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல் !

Posted by - November 27, 2025
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
மேலும்