இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் நல்லிணக்கம் தொடர்பாக பேசலாம்.

494 0

வடக்கில் அளவுக்கதிகமாக நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்பப்பட்ட பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் பேச முடியும்.இவ்வாறு வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடும் செயலணியில் அமர்பில் கலந்து கொண்டு வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 27 வருடங்களாக முகாங்களில்தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்களுடைய நிலங்கள் மட்டும் எங்களிடம் இருந்து பறிக்கப்படவில்லை.06-1446810909-lankan-tamils34-600

ஏங்களுடைய கௌரவம், தொழில், பிள்ளைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம் என்பவையும் எங்களுடைய வலி.வடக்கு காணிகளுடன் சேர்த்து பறிக்கப்பட்டுவிட்டது. இன்று முகாம் என்பது மட்டுமே எங்களுடைய சொத்தாக உள்ளது.

எங்களுடைய காணிகளை விட்டுவிட்டு தேனீர் கூட அருந்த முடியாதக கஸ்ரத்தில் நாங்கள் வாழந்து வருகின்றோம். ஆனால் எங்களுடைய காணிகளில் ஹோட்டல்களை கட்டிவிட்டு, சுற்றுலாப் பயணிகளை அழைத்து, அவர்களுக்கு சுகபோக வாழ்வுகளை கொடுத்து அவர்களிடம் இருந்து பணத்தினை அறவிட்டுக் கொண்டு இராணுவம் செழிப்பாக இருக்கின்றது.ஆனால் இடம்பெயர்ந்து எங்களுக்க வழங்கப்படும் நிவாரணங்களும் நிறுத்தப்பட்டு, தொழில்களும் பறிக்கப்பட்டுவிட்டது.

இடம்பெயர்ந்து தற்காலிகமாக உள்ள முகாங்களில் தங்கியுள்ள எங்களை அங்கேயே நிரந்தர பதிவிடமாக பதிவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதுதவிர மயிலிட்டியில் இருந்த பிள்ளையார் கோவில், தேவாலயம் என்பனவும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது.எங்களை எங்களுடைய நிலத்திற்கு விடுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம். எங்களுக்கு நட்ட ஈடும் வேண்டாம், நிவாரணமும் வேண்டாம்.எங்களை விட்டால் கடலில் மீன்பிடித்து சொந்த நிலத்தில் குடிசையேனும் அமைத்துக் கொண்டு நின்மதியாக இருப்போம்.

முதலில் அங்குள்ள இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் எங்களை அங்கு மீள்குடியேற்றுங்கள். இதன் பின்னர் நல்லிணக்கம் தொடர்பாக பேசலாம் என்றனர்.