நிலையவள்

தொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு!

Posted by - April 21, 2019
அதன்படி இன்று காலை 10 மணிமுதல் பண்டாரநாயக்க விமான நிலையத்தினுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைவாக விமான பயணிகள் தவிற ஏனையோர் விமான நிலைய வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் எனவும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் விமானப் பயணங்களை…
மேலும்

ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்

Posted by - April 21, 2019
கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரதமர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் இரு பாரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன இந்நிலையில்…
மேலும்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்!

Posted by - April 21, 2019
கொழும்பில் இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு, கொச்சிக்கடை, நீர்கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிலும், மற்றும் கிங்ஸ்பெரி, சினமண்ட்கிரேண்ட், சங்கரில்லா போன்ற நட்டசத்திர…
மேலும்

நீர்கொழும்பு குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்!

Posted by - April 21, 2019
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் 50இற்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் பண்டிகை ஆராதனை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இன்று காலை இக்குண்டுவெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.…
மேலும்

மட்டக்களப்பு குண்டுவெடிப்பு – 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Posted by - April 21, 2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வபத்தில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில், இதுவரை 10 பேர் பலி!

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த குண்டு வெடிப்பு சம்பவமானது கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதிலும் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இடம்பெற்ற இந்த…
மேலும்

கொச்சிக்கடை தேவாலயத்தில் மற்றுமொரு குண்டு…………..

Posted by - April 21, 2019
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மற்றுமொரு குண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் தீவிர சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இன்று காலை ஈஸ்டர் ஆராதனையின்போது குண்டு வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

நாட்டை உலுக்கும் பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்!

Posted by - April 21, 2019
கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து கொழும்பில் இரு நட்டத்திர ஹோட்டல்களிலும் இன்று காலை இரண்டு குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியிலும், சினமன் கிரேண்ட் ஹோட்டலிலும் இந்த குண்டு…
மேலும்

கொழும்பு ஷங்ரி – லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு

Posted by - April 21, 2019
கொழும்பிலுள்ள ஷங்ரி – லா நட்சத்திர ஹோட்டலிலும் சற்றுமுன்னர் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, கொழும்பிலுள்ள சினமன் கிரான்ட் நட்சத்திர ஹோட்டல் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர ஹோட்டல்  ஆகியவற்றிலும் குண்டுவெடித்துள்ளதாக தற்போது கிடைத்த தகவல்கள்…
மேலும்

நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்பு!

Posted by - April 21, 2019
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸாரை . வெடிப்பு இடம்பெற்றதை உறுதிப்படுத்திய பொலிஸார், இதனை குண்டுவெடிப்பென சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். சேத விபரங்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.…
மேலும்