துரோகியின் பெயரைச் சூட்டுவதற்கு மோடி துணை போவதா? பழ. நெடுமாறன்

325 5

யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு துரோகியின் பெயர் பலகையைக் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா என்பவரின் பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடி அவர்களைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கதாகும்.

1975-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவிர முயற்சி செய்தார்.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் மீது சிங்கள காவல்படையை ஏவி 9 தமிழர்கள் படுகொலையானதற்கும் அவரே காரணம்.

பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரின் பெயரை அந்தத் திடலுக்குச் சூட்டினால் அது எத்தகைய மன்னிக்க முடியாத செயலோ, அதைப் போன்ற செயல்தான் யாழ் திடலுக்கு துரையப்பாவின் பெயரைச் சூட்டியதாகும்.

இதே திடலில் படுகொலையான 9 தமிழர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் இடித்துத் தகர்த்துவிட்டது. அதே இடத்தில் மீண்டும் அந்த நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்குப் பதில், அவர்கள் கொலைசெய்யப்படுவதற்குத் துணையாக நின்ற ஒருவரின் பெயரைத் திடலுக்குச் சூட்டுவது வெந்தப்புண்ணில் வேலைச் செருகுவது போலாகும். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

There are 5 comments

  1. After exploring a few of the articles on your blog, I really appreciate your technique of writing a blog. I book marked it to my bookmark website list and will be checking back in the near future. Take a look at my website too and let me know your opinion.

Leave a comment

Your email address will not be published.