இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General (R) Faheem Ul Aziz HI (M) வெள்ளிக்கிழமை (16) காலை சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்தார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால சமூக, பொருளாதார, விளையாட்டு மற்றும் குறிப்பாக சுகாதாரத் துறை நடவடிக்கைகளின் மேம்பாடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. நாட்டின் மருந்து விநியோகம் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து மருந்து, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத உற்பத்தித்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளும் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டன.
நாட்டில் இயங்கும் இலவச சுகாதார சேவை குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்களின் ஆதரவு தற்போது உள்ளது போலவே எதிர்காலத்திலும் தொடர்ந்து வழங்கப்படும் என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவு இந்த சந்திப்பின் போது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்கே மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஒருவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

