திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உற்பட பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று திருகோணமலையில் வைத்து விமல் வீரவன்ச வௌ்ளிக்கிழமை (16) கூறினார்.
திருகோணமலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உற்பட நான்கு தேரர்களை பார்வையிட்ட பின்னர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களம் மீது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் மேற்கொண்டுள்ளார்.தற்போது அவர் தந்திரமாக விலகிவிட்டார்.ஆனால் திணைக்களம் தனித்து விடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்

