சுவிட்சர்லாந்தில், திருமண அபராதம் என அழைக்கப்படும் வரியை ரத்து செய்வது தொடர்பில் மக்கள் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில், தனிநபர் செலுத்தும் வரியை விட, திருமணம் செய்துகொண்ட தம்பதியர் அதிக வரி செலுத்தும் நிலை உள்ளது.
ஆகவே, அதை திருமண அபராதம் (marriage penalty) அல்லது திருமண வரி என்கிறார்கள்.
இந்நிலையில், இந்த திருமண அபராதம் என அழைக்கப்படும் வரியை ரத்து செய்வது தொடர்பில் சுவிஸ் மக்கள் முடிவு செய்ய இருக்கிறார்கள். மார்ச் மாதம் 9ஆம் திகதி, இந்த திருமண அபராதம் என அழைக்கப்படும் வரியை ரத்து செய்வது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

