காட்டு யானை மீது மோதுவதை தவிர்க்க முயன்ற இ.போ.ச பஸ் விபத்து!

15 0

பொலன்னறுவை, திம்புலாகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து புதன்கிழமை (14) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து தெஹியத்தகண்டிய நோக்கிப் பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று வீதியில் இருந்த காட்டு யானை மீது மோதுவதை தவிர்க்க முயன்ற போது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தின் போது பஸ்ஸில் சாரதியும் நடத்துனரும் மாத்திரமே இருந்துள்ளதாகவும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.