களனி பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி, நபர் ஒருவர் கொழும்பு காலி முகத்திடல் மைதானத்திற்கு முன்னால் உள்ள மின் கம்பம் ஒன்றில் ஏறி இன்று வியாழக்கிழமை (15) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்பதற்காக பொலிஸாரும், தீயணைப்புப் படையின் மீட்புப் பிரிவினரும் இணைந்து விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

