பொலன்னறுவை சிறிபுர பகுதியில் வயல் நிலமொன்றில் காவலில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுகெலே பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) அதிகாலையில் வயல் நிலமொன்றிலிருந்த பெண் ஒருவர் காட்டுயாணை தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது விளைநிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காகத் தனது கணவருடன் வயல் பகுதியில் உள்ள வாடி ஒன்றில் தங்கியிருந்த போதே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலன்னறுவை, களுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைச் சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

