மட்டக்களப்பு நகரில் தைத்திருநாளை கொண்டாடத் தயாராகிவரும் மக்கள்

6 0

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு மக்கள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வரும் அதேவேளை மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகைதந்து பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

பொங்கலுக்குரிய பொருட்கொள்வனவிலும் புத்தாடைக் கொள்வனவிலும் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மட்டக்களப்பு நகரில் தற்போது காணப்படும் சனப்பெருக்கம் காரணமாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் அதிகளவான மக்கள் வருகைதருவதன் காரணமாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட போக்குவரத்து நடைமுறைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.