ஈரானில் சுமார் 2,000 பேர் பலி

8 0

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஈரான் மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்கள் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

 

இந்த போராட்டங்களை அடக்குவதற்கு எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்ட பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகள் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்வாறு வைத்தியசாலைகளில் கொண்டுவரப்பட்டவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும், இவர்களில் பலர் தலை அல்லது மார்பில் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.