மக்கள் முன்னணியினரின் “இனவிடுதலைக்காக உறவுகளுடன் சந்திப்பு “சுவெற்றா(Schwerte, Germany)

91 0

11.01.2026 ஞாயிற்றுக்கிழமை யேர்மனிய நாட்டின் சுவெற்றா(Schwerte) நகரில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் அரசியற் கலந்துரையாடற் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ,மக்கள் நிறைந்திருந்த மண்டபத்தில் முதலில்
த.தே.ம.முன்னணியின் பொதுச்செயலாளர் திரு. செ.கஜேந்திரன், பரப்புரைச் செயலாளர் திரு.ந.காண்டீபன், கட்சியின் பேச்சாளர் திரு.க.சுகாஷ், தேசிய அமைப்பாளர் திரு.த.சுரேஸ் மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் திரு.தீபன் திலீசன் ஆகியோர் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து உரையாற்றினார்கள்.
தொடர்ந்து வருகை தந்திருந்த மக்களுக்கான கேள்வி நேரத்தில் பல்வேறுபட்ட கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.
நிறைவாக தாயக மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் எவ்வாறு இணைந்து பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம் எனவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக அனுரகுமார திசநாயக்காவின் புதிய அரசினால் கொண்டுவரப்பட உள்ள ‘ஏக்கிய ராச்சிய’ என்ற ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்தினை தாயகம் மற்றும் புலம்பெயர்வாழ் மக்கள் முழுமையாக நிராக்கவேண்டும் என்பதனை வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துரைத்தனர். நிறைவாக வருகை தந்திருந்த அனைத்து மக்களும் தமது மழுமையான ஆதரவினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்குவோமென உறுதி கூறி நிகழ்வு நிறைவடைந்தது.