“கரூர் வழக்கை இங்கே விசாரித்து இருந்தால் இவ்வளவு சிரமமும் சங்கடமும் ஏற்பட்டு இருக்காது. டெல்லிக்கு விஜய்யை வரவழைத்து அரசியல் ஒப்பந்தமும், தேர்தல் ஒப்பந்தமும் போடுவதற்கு முயற்சி செய்யலாமா என பாஜக பார்த்துக்கொண்டு இருக்கிறது” என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜன.12) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நீலகிரி மாவட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிறார். ராகுல் காந்தியுடன் தனியார் பள்ளி விழாவிலும், சமத்துவப் பொங்கல் விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளோம்.

